Tuesday, March 5, 2013

                                                                            PENN

                                    பாரதியின்  மகளிர்  தின  வாழ்த்துக்கள் 

                                                              புதிய  ஆத்திசூடி 

அச்சம்  தவிர்
உடலினை உறுதிசெய்
ஏறு  போல் நட
ஐம்பொறி  ஆட்சி கொள்

குன்றென நிமிர்ந்து நில்
கைத்தொழில்  போற்று
கொடுமைகள்  எதிர்த்து நில்
சிதையா  நெஞ்சு  கொள்

செய்வது  துணிந்து  செய்
சைகையில்  பொருள்  உணர்
துன்பம்  மறந்திடு
தோல்வியில்   கலங்கேல்

நேர்பட  பேசு
நையப் புடை
புதியன விரும்பு
பெரிதினும்  பெரிது  கேள்

போர்தொழில்  பழகு
மானம்  போற்று
மூப்பினுக்கு  இடம்  கொடேல்
யாரையும்  மதித்து  வாழ்

 
ரௌத்திரம்  பழகு
வீரியம்  பெருக்கு
வெடிப்புற  பேசு ரௌத்திரம்  பழ
வையத் தலைமை  கொள்

தேசத்தை காத்தல்  செய்
தையலை  உயர்வு  செய்
வேதம்  புதுமை செய்
பூமி  இழந்திடேல்


பாரதியின்   கவலை   ???  {கரும்புத்  தோட்டத்திலே  }

பெண்ணென்று  சொல்லிடிலோ   ஒரு
பேயும்  இரங்கும்  என்பார் : தெய்வமே  நினது
எண்ணம்  இரங்காதோ ?  அந்த
ஏழைகள்  அங்கு  சொரியுங்   கண்ணீர்  வெறும்
மண்ணிற்  கலந்திடுமோ ? தெற்கு
மாகடலுக்கு  நடுவினிலே ; ஆங்கோர்
கண்ணற்ற  தீவினிலே  தனிக்
காட்டினிற்  பெண்கள்  புழுங் குகின்றார் !?

நெஞ்சம்  குமுறுகின்றார்  கற்பு
நீங்கிடச் செய்யும்  கொடுமைலே  அந்த
பஞ்சை  மகளிரெல்லாம்  துன்பப்
பட்டு  மடிந்து  மடிந்து  மடிந்தொரு
தஞ்சமு  மில்லாதே  அவர்
சாகும்  வழக்கத்தை  இந்தக்   கணத்தினில்
மிஞ்ச  விடலாமோ !? ஹே !!
வீர கராளி  சாமுண்டி , காளீ !!



No comments:

Post a Comment