Wednesday, February 13, 2013

PENN

பெண் ....!!!!
சென்ற  டிசம்பர்  மாதத்தில் .....
ஒரு  நாள் ...
அதிகாலை   நேரம் 
ஒரு  கனவு ....
கனவில்   ஒரு  
பெண்ணின்   விசும்பல் .....
''இந்தியா   ....
ஆடை  ஏற்றுமதியில் 
அதிகம்   பொருள் 
ஈட்டுகிறதாம் ....!!
சில  இந்தியர்களால் 
சிதைக்கப்பட்டு ..
நிர்வாணமாக  
தெருவில்   கிடக்கின்றேன் 
எத்தனை   இந்தியர் 
என்னை 
கடந்து   சென்றார்கள் ..!!
அத்தனை   பேருமே 
ஆடை  
அணிந்திருக்கவில்லையா ...!!
பின்  ......ஏன்...
ஏன்  மீது 
ஒரு  சிறு   துண்டையாவது 
வீசி  விட்டுச்   செல்ல 
ஒரு  இந்தியருக்கும் 
மனம்   இல்லை..!!!
என்  மானத்தை  
இவர்களும்    சேர்ந்து 
பங்கப்  படுத்தி விட்டார்களே .....!!!''
விழித்துக்   கொண்டேன் ...
மனம்  நொந்து 
திரும்பிப்  பார்க்கின்றேன் 
கணக்கற்ற   பெண்கள் ...
வயது  வரம்பின்றி 
அதே   விசும்பலுடன் .....!!!
         

Wednesday, February 6, 2013

காதலர் தினம்..!!


                                    








பிப்ரவரி 14ஆம்  தேதி  உலகெங்கிலும்  காதலர் தினம்  கொண்டாடப்படுகிறது .இவ்வாறு  கொண்டாடுவது  சரியா  அல்லது தவறா  என இனி  விவாதம்  செய்யத்  தொடங்குவார்கள் .இது  ஒரு  பக்கம் இருக்கட்டும் .காதல் மனித வாழ்வின்   ஒரு அங்கமாகும் .இதை  தவிர்க்க  இயலாது .திருமணத்தில்  முடியக்கூடிய  பொருத்தமான காதல்  அதாவது துணைத்தேர்வு  ஏற்றுக்கொள்ள கூடியதே .

குழந்தை  பருவக்காதல் ,விடலை பருவ  காதல் ,மாணவப்பருவ  காதல்  ஆகியன  உறுதியாக  தவிக்கப்  பட  வேண்டும்.21 வயதிற்குள்  ஏற்படும் காதல் போன்ற  உணர்வு  நிச்சயமாக  காதல் இல்லை .இதையே  நாம்  வாழ்கை  என்று  நம்பிக்கொண்டு  நம்  முன்னேற்றப் பாதையில்  நாமே  பெரும் முட்டுக்கட்டைகளை  போட்டுக் கொள்ளக்  கூடாது.  

நான் கல்லூரி யில்   பணியாற்றிக்  கொண்டிருக்கும்  போது  பாடத்தினூடே  விழிப்புணர்வு  செய்திகள்  குறள் ,பாரதி ,பாரதிதாசன்  போன்ற  கவிகளின்  கூரிய  கருத்துக்களை  நாள் தவறாமல்  மாணவியரின்  மனதில் விதைப்பதை  ஒரு கடமையாக  கொண்டிருதேன் . இதனால்  மாணவியர்கள்  என்னுடன்  மரியாதை  கலந்த நெருக்கம்  காட்டினார்கள் .நான்  100  சதவிகிதம்  
நம்பிக்கைக் குரியவள்  என்பதை  அவர்கள்  என்னிடம்  பலர் மனம்  திறந்து 
பேச  ஆரம்பித்தார்கள் . நாம்  நினைத்துக்  கொண்டிருக்கிறோம்  இளம்  பெண்கள்  பொறுப்பில்லாமல்  வீண் அரட்டையிலும்  அலங்காரம்  செய்து  கொள்வதிலும் தம்  நேரத்தை  வீணடிக்கிறார்கள்  என்று .இது  முற்றிலும் தவறான  கண்ணோட்டமாகும் . அவர்களின் மனதோடு  பேசிப்  பாருங்கள் , அப்போது  புரியும்  அவர்கள் யார் என்று . நான்  என்  பணிக்காலம்  முழுவதையும்  அரசு  பெண்கள்  கல்லூரியிலேயே  செய்திருக்கின்றேன் . அவர்களுக்குள்  எத்தனை எத்தனை  கவலைகள்.....பணக்கவலை , தந்தைபற்றிய கவலை தாயின்சுமை  பற்றய கவலை , தக்க ஆடையில்லா  கவலை , உணவில்லா கவலை ....சொன்னால்  பட்டியல்  நீண்டு  கொண்டே  போகும் .முதல்வரின்  உதவியோடு  முடிந்தவரை  மாணவியர் பலர்  பல்வேறு  உதவிகளை  பெற்றிருக்கிறார்கள்
சிலர் காதல் பிரச்சினையோடு  வருவதுண்டு.  அவர்களை  முதலில்  மனம்  திறந்து  பேச  விடுவேன் .முதலில்  காதலில் உள்ள சிக்கல்களை  மனம் நோகாதபடி  எடுத்துக் கூறி, காதலிக்கும் பருவம்  இதுவல்ல  .  இது  உன் எதிர் காலத்தை  செதுக்கிக் கொண்டிருக்கும்  காலம் .உன் கவனம்  முழுவதும்  இப்போது நன்கு படிப்பதிலும் ,பல போட்டித் தேர்வுகளை எழுதி  அவற்றில் வெற்றி பெற்று உன்எதிர்   காலத்தை  வளமானதாக ஆக்கிக்  கொள்வதிலேயே மட்டும்  உறுதியாக  இருக்க  வேண்டும் .ஒருவரின்  உண்மையான  சுதந்திரம்  பொருளாதார  சுதந்திரமே .'' வேலை வாய்ப்பு .....வாழும் வாய்ப்பு ...''. குறிப்பாக  பொருளாதார   சுதந்திரம்  இல்லாத  பெண்கள்  அடிமைத்தனத்திலிருந்து  பெண்களுக்கான அவலத்திலிருந்து   ஒரு போதும்  விடுதலை பெற  இயலாது     என  அவர்களுக்கு  புரியும்படி  எடுத்துக்   கூறியிருக்கின்றேன் . பலமுறை  அவர்களோடு  அவர்களாய்  இருந்து  கலந்தாய்வு  செய்ததில் பொருத்தமற்ற  காதலில்  இருந்து  பலர்வெளிவந்திருக்கின்ற்றனர் .சிலர்  காதலை தள்ளி  வைத்தனர். ஆண்களும்  பெண்களும்  சேர்ந்து  பயில்கின்ற  மற்றும்  பணிபுரிகின்ற   இடங்களில்  மக்களே, நீங்கள்  எந்த  வயதினராய்   இருந்தாலும்  ஒருவருக்கொருவர்  சகோதர சகோதரிகளாய்  வாழப்  பழகிக் கொள்ளுங்கள் .தக்க  வயதினிலே  தக்க  பருவத்திலே  குறிப்பிட  ஒருவர்  நம்   வாழ்க்கை   துணையானால்  நம் வாழ்க்கை  மகிழ்ச்சி யாக   இருக்கும்  என  நினைத்தீர்களானால்  எதிர் பாலருக்கும்  அத்தகைய  ஈடுபாடு  உங்கள்மேல்  இருக்குமானால்   திருமண எண்ணம்  உறுதி  என்றால் உங்கள்  காதல்  சாதி ,இனம்  ,மதம்  கடந்து  ஏற்றுக் கொள்ளக் கூடியதே.இங்கே  பெற்றோர்களுக்கு ஒரு  வார்த்தை .உங்கள் மகனோ அல்லது  மகளோ  காதல்வயப்படிருக்கிறாள்  எனத்   தெரிய வந்தால்  உடனே  அடக்கு முறையினை  வன்முறைகளை  கையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.பெற்றோர்களே  பிள்ளைகளின்  நம்பிக்கையான   முதல்  நண்பர்கள்  .அவர்களை அன்போடு அணுகி  என்ன  நடக்கிறது   என  உண்மையான  அக்கறையுடன் கேளுங்கள் . அவர்களிடம்  உண்மையாய்  இருத்து  அவர்களின்  காதலை  நன்கு  விசாரித்து  இதில்  எல்லாம்  சரியாகவே  இருக்கிறது என  தெரியவந்தால்  அவர்களுக்கு  திருமணத்தை  சிறப்பாக  நடத்தி  வைத்திடுங்கள் .மாறாக  படிப்பை  பாதியில்  நிறுத்தி , வீட்டில்  சிறை  வைத்து  ,அவசர கட்டாய கல்யாணத்திற்கு  ஏற்பாடு செய்து  ,அல்லது  ஒதுக்கி வைத்து  , என  வன்முறையில் இறங்கினால்  அது  கௌரவ கொலைக்கு  சமமானதே ,...இதன்  பின் விளைவுகள்  மிக மிக  மோசமானதாகவே இருக்கும்  .அவர்கள் வீட்டை விட்டுஒடிப்பொவது , தற்கொலை செய்து  கொள்வது  ரகசிய  திருமணம்  செய்து கொள்வது என  பல  விபரீத  முடிவுகளை  எடுக்க  நேரிடும் . அப்படி  நடந்தால்  யாருக்கு லாபம் ..... ஒரு வேளை  சமூக விரோத  கும்பலிடம்  சிக்கிக் கொள்ள  நேர்ந்தால்  அவர்கள்  நசிந்து போய்விட  மாட்டர்களா .....கருவாய் உங்கள் வாழ்க்கையில் நுழைந்த நாள்   இந்த நாள் வரை பாலூட்டி ..சீராட்டி  ....வளர்த்த உங்கள் செல்லக்   குழந்தை  கஷ்டப்படுவதில்  உங்களுக்கு உடன்பாடா ...பெற்றோர்களே  உங்கள்  பிள்ளைகளைவிட   உங்களுக்கு  எது பெரிது  ...யார் பெரியவர்  ...அவர்களை நீங்களே சபித்து மலரும் போதே பொசுக்கி  விடாதீர்கள் . அவர்களை அரவணைத்துக்  கொண்டு  அவர்கள் அரவணைப்பில்  உங்கள் எஞ்சிய  காலத்தை  மன  மகிழ்ச்சியோடு  கழித்திடுங்கள்   ....//..காதலர்களே ....உங்களுக்கு  சில வார்த்தைகள்  ........................காதலை உறுதி  செய்யும்  முன்  உங்களிடம்  வைக்கப்  படும்  காதல்  உள் நோக்கம்  கொண்டதா ,எதிர்பார்ப்புகளுடன்  கூடியதா ,,அல்லது  காரணக்  காதலா  என தீர  ஆராயந்து  பார்க்கவும் . .........காதல் திருமணத்தில்  முடியும் வரை  நெருக்கம்  தவிர்க்கவும் ..........தனிமை  சமூக விரோதிகளுக்கு  உங்களை  இரையாக்கக்  கூடும் .காதலர் தினத்தை கொண்டாடுவதை  தவிர்க்கவும்..........காதலை பறைசாற்றத்  தேவை இல்லை .பொய்யான  காதலை  எதிர்கொண்டவர்கள்  அதனை  விட்டொழித்துவிட்டு  சுதந்திரமாக பறவை  போல் வாழ்க வளமுடன் ..... உங்கள்  எதிர்  காலத்தை  காப்பாற்றி விட்ட   திருப்தியோடு  முனேற்றப்  பாதையிலே மகிழ்ச்சியோடு  நடை  போடுங்கள் .இந்த நாளை  விடுதலை  நாளாக  எண்ணி   மன  நிறைவோடு  வாழ்க  வளமுடன்  .......