Saturday, January 26, 2013

desap phitha.

                   


      நமது  நாட்டின் தேசப் பிதா மஹாத்மா  காந்தியவர்களுக்கு  நாம்  அனைவரும் நன்றி கூறும்   மாதம்  இது . மனிதன்  எவ்வாறு  வாழ  வேண்டும்  என்பதற்கு  மகாத்மா  அவர்களின்  வாழ்வே  நல்ல உதாரணம்  ஆகும் .
                               காந்திஜி  படிப்பதற்காக வெளி  நாட்டிற்கு  புறப்பட்டபோது அன்னாரின் அன்னையார் அவரிடம் மது ,மாது, மாமிசம்  ஆகியவற்றை அறவே  தவிர்க்க  வேண்டும். என்று  சத்தியம்  வாங்கிக்கொண்டார் .அடிகளார் அன்னைக்கு   கொடுத்த  வாக்கை  தன்  வாழ்நாள்  முழுவதும் கடை பிடித்தார் .   இப்போது  மதுவை  மட்டும் எடுத்துக்  கொள்வோம் .ஒவ்வொரு  பண்டிகை  முடிந்ததும்  மறுநாள் செய்தித்தாளில்  வரும்  முக்கிய செய்தி அன்றைய  மதுக்கடை வருமா னம் 95கோடி  ரூபாய் .
                                மது உள்ளே  சென்றால்  என்ன   நடக்கும்? கொலை , கொள்ளை ,கற்பழிப்பு .மக்களே ,சமுதாய  சீர்கேட்டிற்கு வித்திடும் மதுவை  அடியோடு ஒழித்து விடுங்கள் .. வீட்டையும்,நாட்டையும் ஆரோக்கியமாக்கி வளமாக மாற்றுங்கள்.  இதுவே நாம் காந்திஜி க்கு செய்யும் உண்மையான மரியாதையாகும்.
                                        மது  என்ன  செய்யும் ????......
          முதலில்  பொருளாதார  சீர்கேட்டை  ஏற்படுத்தும் .அதன்  விளைவாக  குடும்பத்தில்  பசி ,பட்டினி ,சண்டைகண்ணீர்  குழந்தைகளின் கல்வி கெடுதல் ,மற்றும்  மனநலம்  பாதிக்கப்பட்டு  அல்லல் படுதல் ,என  தொடர்ந்து அக்கம் பக்கத்தாரின் கேலி  ,கிண்டல் ,அலட்சியப்பார்வை  அதனால்  ஏற்படும் குடும்பப்  பாதுகாப்பின்மை ,          என  அக்குடும்பம்   ஆடிப்  போவதை  நாம் மறந்து  போகலாமா ???

                                      இதற்குத்தானே  வள்ளுவர் பெருமான்  '' கள்ளுண்ணாமை '' பற்றி  பத்து  குறட்ப்பாக்களை  93ஆம்  அதிகாரத்தில் எழுதிஉள்ளார் .

                    ''உண்ணற்க  கள்ளை  உணில் உண்க    சான்றோரான்
                       எண்ணப்   படவேண்டா   தார் .''
                                                       
                         துஞ்சினார்   செத்தாரின்   வேறல்லர்   எஞ்ஞான்றும்
                         நஞ்சுண்பார்   கள்ளுண்   பவர் .''
                             
                  மதுவைக்  குடித்தல்   மரணத்தை  அணைப்பதற்கு  சமம் . மனம் ,உடல்  இரண்டும்  ஒரு சேர  நலிந்து  போகும் . மூளை  வீக்கம் , நுரையீரல் வீக்கம் , புற்று  நோய் ,நீரிழிவு  நோய் . பார்வை மங்குதல்  , கண் வீக்கம் , கருவளையம்  உண்டதால் ,முகம் சுருங்கி  ,தோல் சுருங்கி  வறண்டு ,இளம்  வயதிலேயே  கிழத்தன்மை எய்தி ,உடலில் நீர்த்தன்மை குறைந்து ,சிறுநீரகம் செயலிழந்து ,இதயம் பழுதடைந்து ,ஆண்
மை  இழந்து நடை  பிணமாகி ,மயானத்தை  நோக்கி  வேகமாக ஓடும்  மது மனிதா ....மதுவை விட்டுவிடு .
                        இன்று  மது அருந்தும்  பழக்கம்  பெண்களிடமும்  பெருகி வருகின்றது .ஆண்களை  விட  பெண்களின் இரத்தத்தில்  மதுமிக  வேகமாக கலந்து  விடுகின்றது .பாதிப்புகளும் மிக  அதிகமாக  உள்ளது .பெண்மை  பாதிக்கப்படுவதோடு  மார்பகப்புற்றுநோய் ,கருப்பை சீர்கேடு ,இதயநோய் ,நுரையீரல்புற்று  ,மனநலம்  கெடுதல் ,நடத்தையில் திசை மாறிப்போதல்  போன்றன ஏற்பட்டு வாழ்க்கை நரகமாகிப்  போகின்றது .
                                   மக்களே ....வருங்கால  சந்ததிகளை மனதில்  கொண்டு மதுவை  மறந்து  விடுங்கள் .    
..                 மது  விற்பனையால்   அரசிற்கு  நல்ல  வருமானம்  கிடைக்கின்றது . அதை  பயன்படுத்தி  பல  நல்ல  திட்டங்களை  செயல்  படுத்தலாம்  என  நினைக்கின்றனர் .அத்துடன்  கள்ளச்  சாராய  சந்தையின்  ஆதிக்கத்தை  பெருமளவில்  ஒடுக்கி  விடலாம்  என்ற  எண்ணமும்  காணப்படுகின்றது . இது  முற்றிலும்  ஆபத்தானது . ஆயுதத்தால்  ஆயுதத்தை  ஒழித்து  விட   முடியுமா ! தீயை  தீயால்  அனைக்கலாகுமா!!..நோயை  நோயால்  குணப் படுத்த   இயலுமா!!..ஒருபோதும்  இயலாது .
  ;    
                              ''தீயவை  தீய   பயத்   தலால்   தீயவை
                              தீயினும்   அஞ்சப்   படும் !!''    
                   மனிதனை   மிருகமாக்கும்   மது  தீயை  விட  கொடுமையானதாகும் . அதிலிருந்தது   வரும்  வருமானம்  இழிந்த  கீழான  நிதியாகும் . அன்  நிதியின்  அடிப்படையில் செயல்  படுத்தப் படும்   திட்டங்களால்  நாம்  வாழ்வதை  மடிவதே  மேல் . இதைத்தான்  மகாத்மாஜி  அவர்களும்  வலியுறுத்துகின்றார் .

                 '' மது    வியாபாரத்தை   நாம்  வரன்முறை  படுத்துவதால்  மட்டும்     மதுவினால்  ஏற்படும்  தீமைகளை  ஒரு போதும்   ஒழித்துக் கட்ட   இயலாது  .
நாட்டில்   நடக்கின்ற   கொலை , கொள்ளை , பாலியல்  பலாத்காரம் , ஊழல் ,லஞ்சம் ,....போன்ற  இன்ன  பிற  குற்றங்களை  நாம்  வரன்முறை   படுத்தி  உள்ளோமா ..!!  மதுவைப்  போன்றே  மனித  குலத்தின் ஆணிவேரை  ஆட்டி  அச்சுறுத்தும்   புகையிலை  ,பாலியல்  தொழில்  ,கஞ்சா  ஆகியன வற்றை   நாம் வரன் முறை      படுத்தி உள்ளோமா ??...இவற்றை  விற்பதின்  மூலம்   கிடைக்கும்   வருமானத்தைக்  கொண்டு  குழந்தைகளுக்கு   இலவச  கல்வி  அளிப்பதைவிட   இழிவான  செயல்  வேறொன்றுமில்லை !!!!{ YOUNG  INDIA...8.6.1921}

             ''  அதற்காக   நாம்   நம்  குழந்தைகளுக்கு   கல்வி  தராமல்  இருந்து  விட  முடியுமா ..??..தன்னிதிக் கல்வி  முறையில்  படிப்பை  {SELF EDUCATION  } நம்  நாட்டில்  கொண்டு வரலாமே .!!! படிக்கும்போதே  ஓய்வு  நேரங்களில்தம்மால்  இயன்ற    சிறு சிறு   தொழில்களில்  தம்மை  ஈடுபடுத்திக்  கொள்ள  மாணவர்களை   நாம்  ஊக்குவிக்க  வேண்டும்  .குடிசைத்  தொழில்  நமக்கு  எப்போதும்  கை கொடுக்கும் . நமது  இராட்டை  நமக்கு  எளிதாக  பொருள்  ஈட்டித்  தரும் .''..{HARIJAN ..21.9 .1947.}       
                                                                                                                                 
                நமது   நாடு   ஒரு  அயன  மண்டல  பருவக்  காற்று   நாடாகும் . நம்  நாட்டின்   கால  நிலைக்கு  ஏற்ற  ஆடை  பருத்தி  ஆடையே  . பருத்தி  விளையும்   இயற்கை  சூழலும்  இங்குதான்  அதிகம்  காணப்படுகின்றது . கச்சா  
பருத்தியினை  மனித  உழைப்பை  பயன்  படுத்தி  ஆடைகளாக  உற்பத்தி  செய்தால்  இந்தியாவில்  வேலை  இல்லா  திண்டாட்டம்  பெருமளவில்  குறைந்து   விடும் . பருத்தி  அறுவடைக்கு  மிகவும்  ஏற்றது  மனித உழைப்பே .அவர்களால்தான்   நன்கு  வெடித்த  தரமான  பருத்தியினை  பிரித்தறிந்து  சேகரிக்க  இயலும் .  அறுவடை  செய்த  பருத்தினை  நூற்பதற்கு  ஏற்றவாறு  பதப்  படுத்துதல் ,பிறகு  நூல்  நூற்றல் ,நூலை கைத்தறிகளில்  ஏற்றி  ஆடை நெய்தல் , என  எத்தனை  வேலைகள் ...எத்தனை  பேருக்கு  வேலை வாய்ப்பு ..!!காந்திஜி  வலி யுறுத்தியது  போல  மனித  உழைப்பின்  அடிப்படையில் இங்கு  பொருள்  உற்பத்தி  செய்யப் படுமானால் ...இயந்திரங்களின்  ஆதிக்கம்  இந்தியாவில்  கட்டுப்படுத்தப் படுமானால் ...ஆஹா  ..!!!பாவேந்தர் '' ஆசையின்   படி   ''எல்லார்க்கும்   எல்லாம்   என்ற   இடம்   நோக்கி   '' இந்தியா  நகர்ந்து  விடுமே  .

           ''   பூரண   மது  விலக்கை   உடனடியாக  அமல்   படுத்த வேண்டும் .இதன்  காரணமாக  அரசுக்கு  நிதி  நெருக்கடியும்  உடனடியாக  ஏற்படும் என்பதும்  உண்மைதான் . ஆனால்  இது  ஒரு நெருக்கடி  போன்ற  தாற்காலிக மான  தோற்றந்தான்  .வெகு  விரைவிலேயே   இது  மாறி  விடும் . புதிய   புதிய   நிதி  ஆதாரங்கள்  தோன்றத்  தொடங்கும்  .இதற்காக  மக்களின்  மேல்  புதிய  வரிகளைப்  போட்டு  அவர்களின்  சுமைகளை  கூட்டி  விடக்  கூடாது . மதுக்   கடைகளை  மழுவதுமாக  மூடிவிட்ட  பிறகு  மனிதர்கள்  நிச்சயம்  மாறி  விடுவார்கள் . நாட்டில்   ஆரோக்கியமான  மனித  உழைப்பு  அதிக  அளவில்  பயன்  படுத்தப் படும்  . மக்களின்  வருமானம்  அதிகரித்தால்  நாட்டின்  வளம் கூடும் .''...
               இவை  வெறும்  வார்த்தைகள்  அல்ல . சத்தியத்தின்  குரல் .!! உண்மையின்  உறுதி மொழி ..!!செயல்  படுத்தித்தான்  பார்ப்போமே .!!செயல்  படுத்தினால்  இந்தியா   பொருளாதார  சுதந்திரம்  பெறுவது  உறுதி .!!  நம் நட்டு  பெண்களின்  கண்ணீர்   நிரந்தரமாக  துடைக்கப் படுவதும்  நிச்சயம் .!!!
              மக்களே ..!!!இதை  படிக்கும்  பொது  உங்களின்  எண்ண   ஓட்டம்  என்னவாக  இருக்கும்  என்பது  எனக்குப்  புரிகிறது .
இது  சாத்தியமா ??  இது  நடக்குமா ??  இது  எப்படி  முடியும் ?? யார்  நடத்துவார் கள் .?? ஏழைசொல்  அம்பலம்  ஏறுமா ??..மக்களே  இது  நிச்சயம்  நடக்கும் .அந்நியரிடம்  அடிமைப்பட்டுக்  கிடந்தோம்  .காந்திஜி  அவர்களின்  சொற்படி  நடந்தோம்  .விடுதலைப்  பெற்றுத்  தந்தார் . அவர் சொல்வதை  இப்போதும்    கேட்போம் . நம் வாழ்வு  வளம்  பெரும் !!!                

            அண்ணலின்  சொற்களை   ஐயமின்றி  அப்படியே  செயல் படுத்தும்  நம்  நாட்டின்  ஒரு  மாநிலத்தைப்  பற்றி  நாம் அவசியம்  தெரிந்து  கொள்ள  வேண்டும்  .''  சத்தீஸ்கர்  மாநில  அரசு   ''ஜனவரி  2013 ஆம்  ஆண்டில்  தனது
மாநிலத்தில்  பூரண  மது  விலக்கை  அமல்  படுத்தி  உள்ளது  . இந்தியாவில்      .பூரண  மது   விலக்கை   முதன்  முதலாக    அமல்  படுத்தி  உள்ள  மாநிலம்  சத்தீஸ்கர்  மாநிலமே  ஆகும் .''  ANTI  LIQUOR  DRIVE '' ..என்கின்ற  அமைப்பை
CHATTISHGAR   BEVERAGES  CORPORATION  ஏற்படுத்தி  அதை  மக்களிடையே  பரவச்  செய்வதை  ஒரு  சமுதாயக்  கடமையாக  கொண்டுள்ளது  . இந்த  அமைப்பின்  ''விளம்பர  தூதுவர்  ''காந்திஜி  அவர்களே !!!!  இந்த  அமைப்பின்  சேர்மன்  திரு .தேவ்ஜி  பாய்  படேல்  அவர்கள்  காந்திஜி  வாழ்கையின்   பல்வேறு  நிலைகளின்  புகைப்  படங்களை  2013 ஆம்  ஆண்டின்  காலண்டராக  வெளி யிட்டு ள்ளார்  . அவர்  காந்திஜி  படங்களை  பார்க்கும்  போது  மக்களின்  மனதில்  மதுவுக்கு  எதிரான  எண்ணங்கள்  நிச்சயம்  ஏற்படும்  என்று  உறுதியாக  கூறுகின்றார் .
            மாநில  கார்ப்பொரேஷன்  மது  விற்பனை உரிமம் வழங்குவதில்  கடுமையான  கட்டுப்பாட்டை  விதித்துள்ளது . முதல்  படியாக  மக்கள் தொகை 2000 க்கும்  கீழ்  உள்ள அனைத்து  கிராமங்களிலும்  மதுக்    கடைகளை  மூடி விட்டது . அடுத்தபடியாக  மக்கள் தொகை  2500க்கும்  கீழ்  உள்ள  அனைத்து கிராமங்களிலும்   மதுக்  கடைகளை  மூடிவிட்டது . மொத்தமாக  343  மதுக்  கடைகளை  அரசு  சமீபத்தில்  மூடிஉள்ளது . தவிர  213 '' BHARAT  MATHA  VAHINI WOMEN  ORGANISATION ''  என்ற  அமைப்பை  ஏற்படுத்தி  உள்ளது .இந்த பெண்கள் அமைப்பு  மது   விற்பனை  மற்றும்  மது அருந்துதல்  ஆகிய  கொடும் செய்களை  ஒழித்துக்  கட்டுவதில்  முனைப்போடு  செயல்   படுகின்றன .
              நல்லதை  நாமும்  நடைமுறை  படுத்தலாமே !!!

             காந்திஜி  பிறந்த  தினம் ,நினைவு தினம்,  சுதந்திர  தினம் , குடியரசு தினம் என   தினங்களை  கொண்டாடிவிட்டு  மகாத்மாவின்   கோட்ப்பாடுகளை  ஏன்  விட்டு  விடுகின்றோம் !!?? அண்ணலின்  கொள்கைகள்   சாகா  வரம்  பெற்றவை . காலம்  கடந்தும் வாழ்கின்றவை . நம்பிக்கையோடு  அயராமல்  செயல் பட்டால் காந்திஜி  கனவு கண்ட புதிய  இந்தியா  கை கூடும் ...!!!
           மதுவினால்  கூடுதல்  இன்பம்  கிடைக்கின்றது  என்பது  மது  பானம் அருந்துவோரின்  அழுத்தமான  எண்ணமாக  உள்ளது . இது  மிகவும்  கவலைப்   பட  வேண்டிய   விஷயமாகும் . போதையில்  மனித  இயல்பை  இழப்பது  சுகமானதா ???..
            மதுப்  பிரியர்களே !!!..விரதம்  அனுஷ்டிப்பது  போல்  சில  நாட்களுக்கு   மட்டும்  மது  குடிக்காதீர்கள் ..அந்நாட்களில்  காலையில்  வேலைக்குச்  சென்று  கடினமாக  உழையுங்கள் . உங்கள் உழைப்பின்  ஊதியத்தில்  உங்கள்  குழந்தைகளுக்கும்  மனைவிக்கும்  ஏதாவது  வாங்கி  வாருங்கள்  .அவற்றை  அவர்களுடன்  பகிர்ந்து  கொள்ளுங்கள் . பின்  ஊதியத்தின்  பெரும்  பகுதியை  மனைவிடம்  கொடுங்கள்  .அவர் மிகுந்த  மகிழ்ச்சியுடன்  உணவு  சமைத்து  அன்போடு  பரிமாறுவார் .குடும்பத்தில்  உள்ள  அனைவரும்  ஒன்றாக   கூடி அமர்ந்து உண்பதில்   கிடைக்கும்  இன்பத்தை  விட  எது  பெரிய  இன்பம்!!!..
அவ்வாறு   சேர்ந்து  உண்ணும்  போது  உங்கள் குழந்தை  தனது  சின்னஞ் சிறு  கைகளால்  உங்களுக்கு ஊட்டி  விடும்  போது  ஏற்படும்  சுகத்தைவிட   வேறு
எது  பெரிது !

                        ''அமிழ்தினும்  ஆற்ற  இனிதே தம்    மக்கள் 
                         சிறுகை   அளாவிய  கூழ் ..''   என்று   வள்ளுவர்   பெருமான்  கூறி உள்ளது  நினைவில்லையா !!!

                     ''  குழலினிது   யாழ் இனிது   என்பர்தம்   மக்கள் 
                          மழலைச்சொல்   கேளா   தவர்  ''....என்பதுவும்   வள்ளுவரின்  பொய்யா   மொழிகள்  அல்லவா !!!
                       ''மக்கள்மெய்   தீண்டல்   உடற்கின்பம்   மற்றவர்  
                        சொல்கேட்டல்    இன்பம்   செவிக்கு  ''...இதுவும்   பொய்யா மொழிப்  புலவர்தான் .அன்பான  குழந்தை ,பொறுமையான மனைவி , பொறுப்பான  கணவன்  கொண்ட நல்லதொரு  குடும்பம்   என  எல்லாக்   குடும்பங்களும்   நமது  நாட்டில்  காணப்படுமானால்  நாம்  அனைவருமே  மன அமைதியுடன்   மகிழ்வோடு  வாழலாம் .மதுவை  விட்டு  விடுங்கள் .
                   மது   விற்பனையாளர்களே  !!  உங்கள்  மகனோ  பேரனோ  மருமகனோ  சகோதரனோ  நண்பனோ  மதுவைக்  குடிப்பதில்  உங்களுக்கு  உடன்பாடா  ? இல்லைதானே . பின்  எதற்காக  மதுவை  விற்பனை  செய்ய  முன்  வருகின்றீர்கள் ?  உங்கள்நாட்டின்  ''  சொந்த  சகோதரர்கள்  சோகத்தில்  சாகக்  கண்டும்  சிந்தை  இரங்க  '' மறுப்பது  பாவம்  இல்லையா . பொருள்  ஈட்ட  எத்தனையோ  வழிகள்  இருக்கின்றனவே . மது  விற்பனை  செய்வதை இழிவானதாக  கருதி  உடனடியாக  மதுக்  கடைகளை  மூடி  விடுங்கள் .
நல்லது  செய்தல்  ஆற்றீராயினும்   அல்லது  செய்தல் ஒழிமின்   என்ற  கூற்றிற்கு  இணங்க  பூரண  மது  விலக்கிற்கான  முதல்  அடியினை  நீங்கள்  எடுத்து வையுங்கள்  வாழ்க  இந்தியா  !!












No comments:

Post a Comment